Tuesday, February 21, 2006

காலம்...



கண்மூடித் திறப்பதற்குள்
களவாடப் பட்டு விட்டது
வாலிபம்

கருத்திலிருந்து விலகாது
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கண்கள் மூடாது

கடந்து கொண்டுதானிருக்கிறது
காலடிகளைப் பதித்த வண்ணம்
காலம்

புகை பிடித்தல்...



கடைசியில் வைக்க வேண்டிய
கொள்ளி

இப்போது
தானே தன் வாயில்

கலிகாலம்